ஃபர்ஸ்ட் ரைடு: ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350 BS-6

Royal Enfield BS6 கிளாசிக் 350-ல் என்னென்ன புதுசு? | Video :https://youtu.be/EqJXYCEqZ6Q

பிளஸ்:

இன்றுமே இந்த பைக்கின் ரெட்ரோ லுக்குக்காகவும், அதன் சொகுசான ஓட்டுதலுக்காகவும் வாங்கக்கூடிய நபர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தவிர, போட்டி பைக்குகளான ஜாவா (14-17 ஆயிரம் ரூபாய் அதிகம்) மற்றும் பெனெல்லி இம்பீரியல் (35 ஆயிரம் ரூபாய் அதிகம்) உடன் ஒப்பிடும்போது, இன்ஜின் திறனில் அவற்றுக்கு இடையே கச்சிதமாகப் பொசிஷன் ஆகக்கூடிய க்ளாஸிக் 350 பைக்கின் விலை குறைவுதான்.

மைனஸ்:

க்ளாஸிக் 350 ஒரு ரெட்ரோ பைக் என்றாலும், அதன் Locking Mechanism, இன்னும் பழைய ஸ்டைலில் இருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மேலும் பைக்கின் விலையுடன் ஒப்பிடும்போது, டூரிங் பைக்காகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இதில் ட்ரிப் மீட்டர், USB பாயின்ட், Hazard இண்டிகேட்டர்கள், LED லைட்டிங் போன்ற அம்சங்கள் எதுவுமே இல்லாதது நெருடல். தவிர க்ராஷ் கார்டு இன்னுமே ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்படாதது ஏமாற்றமே. இந்த குறைகள் எல்லாம், முற்றிலும் புதிய J ப்ளாட்ஃபார்மில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய க்ளாஸிக் பைக்கில் இருக்காது என்றே தோன்றுகிறது.

Credits:
Host, Script & Producer: J T Thulasidharan
Camera: Suresh & J T Thulasidharan | Video Edit: Ajith Kumar